வவுனியா நாலாம்கட்டை விசேட தேவைக்குட்பட்டோருக்கான புனர்வாழ்வு அமைப்பான வரோட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று (02.11.2024) விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், கழகத்தின் ஜெர்மன் கிளையின் முன்னணி உறுப்பினரும், ஜெர்மனி – இலங்கையர் ஜனநாயக முன்னணியின் உபதலைவருமான அமரர் தோழர் சுப்பர் (கார்த்திகேசு சிவகுமாரன் – புங்குடுதீவு) அவர்களின் 09ஆம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் கழகத்தின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
02.11.2015 ஜேர்மனியில் மரணித்த தோழர் சுப்பர் (கார்த்திகேசு சிவகுமாரன் – புங்குடுதீவு) அவர்களின் 09ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
பதுளை மஹியங்கணை வீதியின் அம்பகஹஒய பகுதியில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பேருந்து விபத்தில் உயிரிழந்த இரண்டு மாணவர்களினதும் சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த விபத்தின் போது குறித்த இருவருக்கும் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே அவர்கள் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள காவல்துறை விசேட அதிரடிப்படையின் காவல்துறை பரிசோதகர் ஒருவர் ரீ-56 துப்பாக்கியுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தத் திணைக்களத்தின் கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் அதிகாரிகளினால் அளுத்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பொதுத் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 168 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 06 வேட்பாளர்களும் இவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். இத்துடன் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 45 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.