வவுனியா நாலாம்கட்டை விசேட தேவைக்குட்பட்டோருக்கான புனர்வாழ்வு அமைப்பான வரோட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று (02.11.2024) விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், கழகத்தின் ஜெர்மன் கிளையின் முன்னணி உறுப்பினரும், ஜெர்மனி – இலங்கையர் ஜனநாயக முன்னணியின் உபதலைவருமான அமரர் தோழர் சுப்பர் (கார்த்திகேசு சிவகுமாரன் – புங்குடுதீவு) அவர்களின் 09ஆம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் கழகத்தின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர தோழர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
