03.11.2023 சுவிஸில் இயற்கையெய்திய தோழர் முருகதாஸ் (மனோகரன் முருகதாஸ்)அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுநாள் இன்று….பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட தோழர். முருகதாஸ் (மனோகரன் முருகதாஸ்) அவர்கள் ஆரம்ப காலங்களில் கழகத்தின் தீவிர ஆதரவாளராக இருந்ததோடு, கழகத்தின் வளர்ச்சியிலும் கழகத்தின் பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.
பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதிலும் அவர் கழகத்தின் சுவிஸ் கிளையின் இணைந்து அதன் முக்கிய செயற்பட்டாளர்களுள் ஒருவரானார் . அன்று சுவிஸில் கழகம் சந்தித்த நெருக்குவாரங்கள், அச்சுறுத்தல்கள் என அனைத்திற்கும் தோழர்களுடன் தோள்நின்று முகங்கொடுத்தார்.