Header image alt text

04.11.2004 அன்று தெஹிவளையில் மரணித்த தோழர் தயாளன் (வேலாயுதன் தயாளகுமார் – கட்டுவன்) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
மலர்வு : 1961.07.22
உதிர்வு : 2004.11.04

கடவுச்சீட்டு பெறுகைக்கான கால ஒதுக்கத்தை இணையவழியில் மேற்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நிலுசா பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு பெறுகைக்காக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் பல நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி கட்டுநாயக்கவில் உள்ள அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் இன்று அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய மற்றும் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிரிஹானை பகுதியில் உள்ள அவரது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பதிவற்ற அதிசொகுசு வாகனம் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, இன்று அவர் நீதிமன்றில் முன்னிலையானதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திகதி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்தமன் சூரசேன, ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் அநீதி இழைக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு 10 பேரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித்த ஹேரத்தின் ஆலோசனைக்கிணங்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது ஏற்பட்ட சிக்கல் நிலையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more

15 நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த 15 பேருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார சேவையுடன் தொடர்புபடாத பதவிகளில் பணியாற்றிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more