கடவுச்சீட்டு பெறுகைக்கான கால ஒதுக்கத்தை இணையவழியில் மேற்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நிலுசா பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு பெறுகைக்காக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் பல நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நாளாந்தம் 1,600 கடவுச் சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன. இந்த புதிய நடைமுறை மூலம் கடவுச்சீட்டு பெறுகைக்கான நீண்ட வரிசையைக் குறைத்துக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நிலுசா பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.