முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிரிஹானை பகுதியில் உள்ள அவரது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பதிவற்ற அதிசொகுசு வாகனம் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, இன்று அவர் நீதிமன்றில் முன்னிலையானதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவிக்கும் தொடர்பில்லை என அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மஞ்சநாயக்க நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இருப்பினும் இதனை நிராகரித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.