Header image alt text

06.11.1988 அன்று இந்து சமுத்திரத்தில் மரணித்த தோழர்கள் நிதி (சோமசுந்தரம் சந்திரபாலன் – நெடுந்தீவு), பாப்பா (முல்லைத்தீவு), கோபி (சங்கானை) சின்னசங்கர் (முல்லைத்தீவு), குமார் (தும்பளை பருத்தித்துறை) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையின் ஆட்சியைச் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு தலா 35 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தண்டனைக்கு மேலதிகமாக, பிரதிவாதிகள் ஒவ்வொருவருக்கும் தலா 125 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து உதிரிப் பாகங்களை வழங்குவதற்காக பஞ்சிகாவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 125 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவாகத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். Read more

குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட மகப்பேறு வைத்திய நிபுணர் ஷாபி சிஹாப்தீன், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more

பொது நிர்வாக சேவை உள்ளிட்ட பல அரச நிர்வாக சேவைகளில் 1200-இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. பொது நிர்வாக சேவை மற்றும் கணக்காய்வு சேவைகளிலேயே அதிக வெற்றிடங்கள் நிலவுகின்றன. குறித்த சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு பரீட்சைகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன் பெறுபேறுகளின் அடிப்படையில் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். Read more

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 47ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க சட்டத்தின் பிரகாரம் 538 இலக்டோரல் கொலெஜ் வாக்குகளில் 270 வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளரே அமெரிக்க ஜனாதிபதியாவார். Read more