
Posted by plotenewseditor on 7 November 2024
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 7 November 2024
Posted in செய்திகள்
கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த தோழர் சின்னக்குட்டி (சுப்பிரமணியம் லங்கேஸ்வரன்) அவர்கள் இன்று 07.11.2024 காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.Posted by plotenewseditor on 7 November 2024
Posted in செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, பிரசார நடவடிக்கைகளுக்காக இன்னும் 4 நாட்கள் மாத்திரமே உள்ளதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம்பமாகவுள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார். Read more
Posted by plotenewseditor on 7 November 2024
Posted in செய்திகள்
புதிதாக நியமனம் பெற்ற 2 தூதுவர்கள் இன்று தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தனர். எகிப்து அரபுக் குடிரயரசின் தூதுவர் அடெல் இப்ராஹிம் (Adel Ibrahim) மற்றும் ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) ஆகியோர் இலங்கைக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நற்சான்று பத்திரங்களை கையளித்த பின்னர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
Posted by plotenewseditor on 7 November 2024
Posted in செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி ஆகியோர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பாகங்கள் பொருத்தப்பட்ட காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நுகேகொடை நீதவான் ருவனி ஜயவர்தன முன்னிலையில் இருவரும் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 November 2024
Posted in செய்திகள்
பாடசாலை மற்றும் பிரிவெனா மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க சீன அரசசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்திற்கு தேவையான சீருடைத் துணிகளே இவ்வாறு வழங்கப்படவுள்ளன. அதன் முதல் தொகுதி இம்மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 7 November 2024
Posted in செய்திகள்
பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட சகல ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை இலங்கை கடற்படையின் வெலிசறையில் அமைந்துள்ள அரச வணிக வெடிபொருள் களஞ்சியசாலையில் கையளிக்குமாறு அந்த அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Posted by plotenewseditor on 7 November 2024
Posted in செய்திகள்
2024 பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இன்றும் நாளையும் விசேட தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 30, 01 மற்றும் 04ஆம் ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்காக இந்த 2 நாட்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். தமது தொழில் இடங்கள் அமைந்துள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.