பாடசாலை மற்றும் பிரிவெனா மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க சீன அரசசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்திற்கு தேவையான சீருடைத் துணிகளே இவ்வாறு வழங்கப்படவுள்ளன. அதன் முதல் தொகுதி இம்மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய தொகை அடுத்த மாதம் கிடைக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார். 2025ஆம் வருடத்திற்கான பாடசாலை சீருடைத் துணி தேவை 1.82 மில்லியன் மீட்டர்கள் ஆகும்.
இதன்படி அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் உரிய நேரத்தில் பாடசாலை சீருடைத் துணிகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.