08.11.2020 இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் கலாமோகன் (அமரர் செல்லத்துரை கலாமோகன்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுகள்… யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, யாழ் கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இவர், கழகத்தின் தமிழீழ மாணவர் பேரவையில் இணைந்து செயற்பட்டார். பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகம் திரும்பும்வரை கழகத்தின் சுவிஸ் கிளையில் இணைந்து செயற்பட்டு வந்தார்.
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக கொரிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. இதன்படி, 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024-2028 காலகட்டத்தில் உள்ளூராட்சி மட்டத்தில் திண்மக்கழிவு மேலாண்மை பொறிமுறையை நிறுவும் மறைமுக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீதிமன்றங்கள் ஊடாக 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(08) நிறைவடைகின்றது. கடந்த 30ஆம் திகதி, இம்மாதம் முதலாம் மற்றும் 04ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்காக இன்று(08) சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட செயலகத்தில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. தபால் மூல வாக்களிப்பிற்காக நேற்றும்(07) இன்றும்(08) இரண்டு விசேட நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.