Header image alt text

வாக்குரிமை பெற்றுள்ள அனைவரும் தமது பெறுமதிமிக்க வாக்குகளை அளிப்பதன் மூலம் தமது விருப்பத்தினையும், எதிர்ப்பினையும், எதிர்பார்ப்புகளையும் எதிர்வரும் 14ம் திகதியன்று வெளிப்படுத்த தயாராகின்றனர். வாக்களிக்கவுள்ள மக்களுக்கு, குறிப்பாக வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் தமிழ் மக்களுக்கு, வாக்களிப்பின்போது விசேடமாக கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து அறிவுறுத்துவதும், தெளிவுபடுத்துவதும் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ள அனைவரினதும் கடமையாகும்.

Read more

கடந்த அரசாங்கத்திலிருந்து கொண்டு அவர்களை ஆதரித்து ஊழலுக்குத் துணை போன எவருக்கும் தேசிய மக்கள் சக்தியில் அமைச்சர் பதவி கிடைக்காது என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு ஒருவிதமாகவும் பணம், பொருள் படைத்தவர்களுக்கு அவை வேறு விதமாகவும் கடந்த காலங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. Read more

இஸ்ரேலிலிருந்து நாடு கடத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர் ஒருவர் அந்த நாட்டின் டெல் அவிவ் விமான நிலையத்தில் வைத்துத் தப்பிச் சென்றுள்ளார். இரண்டு வாரங்களாக பணிக்கு வராதமை மற்றும் ஏனைய இலங்கையர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் குறித்த நபரை நாடு கடத்துவதற்கு முயன்றதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். Read more

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீன அரசினால் வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை ஏற்பட்ட சேதங்களுக்காக இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. Read more