Header image alt text

சிவில் பிரஜைகளிடமுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. துப்பாக்கிகளை ஒப்படைப்பது தொடர்பில் மேன்முறையீடு செய்யப்படாத மற்றும் உரிய திகதியில் ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகள் சட்டவிரோத துப்பாக்கிகளாக கருதப்படுமென அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதுவரை வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் அமைச்சின் வசமுள்ளதாக அவர் கூறியுள்ளார். Read more

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று(10) காலை வந்தடைந்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய கடற்படையால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் 67.5 மீட்டர் நீளமானதாகும். இந்த நீர்மூழ்கியில் 53 பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் நாட்டின் முக்கியத்துவம் மிக்க பல இடங்களைப் பார்வையிடவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.