சிவில் பிரஜைகளிடமுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. துப்பாக்கிகளை ஒப்படைப்பது தொடர்பில் மேன்முறையீடு செய்யப்படாத மற்றும் உரிய திகதியில் ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகள் சட்டவிரோத துப்பாக்கிகளாக கருதப்படுமென அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதுவரை வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் அமைச்சின் வசமுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிவில் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.