12.11.1987 இல் செட்டிகுளம் கல்லாற்று பாலத்தருகில் மரணித்த தோழர்கள் பேர்னாட் (பருத்தித்துறை), கருணாகரன் (பள்ளிமுனை), சேகர் (மண்டான்), தமிழ்த்தம்பி (தி.இராசரத்தினம்- சுழிபுரம்), கரன் (சு.திருநாவுக்கரசு- ஸ்கந்தபுரம்), யோகன் (ஆட்காட்டிவெளி), பிரதிகரன் (கச்சாய்), ஞானராஜ் (ப.மோகன் – பன்குளம்), றமணன் (கனகரட்ணம் – யோகபுரம்) ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி குறித்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கணினி அவசரப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கணினி அவசரப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் சேவை இன்று(12) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாகோ மற்றும் அனுராதபுரம் இடையிலான ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தலைமன்னார் ரயில் சேவை சுமார் 11 மாதங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே போக்குவரத்து பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த 23ஆம் திகதி பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியதுடன், மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 06 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.