விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில் வாய்ப்புகளுக்குக் கொரியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் சங்கம் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
அறுகம்பை பிரதேசம் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருந்த பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரையில் அறுகம்பை பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கடந்த 23ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் பாதுகாப்பு தொடர்பான அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த பாதுகாப்பு தொடர்பான ஆலோசனையை விலக்கிக்கொள்ளுமாறு வௌிவிவகார அமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. அதற்கமைய, 30 உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக 50 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது.