Header image alt text

2024 பொதுத் தேர்தலில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரிய அளவிலான எந்தவித முறைகேடும் இதுவரை பதிவாகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சில மாவட்டங்களில் அஞ்சல் மூல வாக்குகளை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எண்ணும் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றன. Read more

தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு 6 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 070 211 71 17, 011 366 80 32, 011 366 80 87, 011 366 80 25, 011366 80 26 மற்றும் 011 366 80 19 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடரும் என இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. Read more

பொதுத் தேர்தலின் முதலாவது பெறுபேறை நள்ளிரவிற்கு முன்னர் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் இன்று(14) நடைபெற்றது. இதற்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு விடுத்திருந்த பயணக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது. முன்னதாக அருகம்பைப் பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தெரிவித்து, தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தல் விடுத்திருந்தது. இதனையடுத்து இஸ்ரேலும் இலங்கையிலுள்ள தங்களது நாட்டு பிரஜைகளுக்கு பயண கட்டுப்பாட்டை விதித்திருந்தது. Read more