ஒற்றையாட்சிக்கு எதிராகவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதாகத் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80,000 வாக்குகள் மாத்திரம் கிடைத்துள்ள போதிலும் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு 150,000 வாக்குகள் கிடைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்றிரவு(15) கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் 05 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்றிரவு(15) மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை ஜனாதிபதி, அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைத்திருந்தார்.
10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நாளில் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் நடைபெறுவதால் அன்றையநாள் மிகவும் விசேட தினதாகும். முதலாவது அமர்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகின்றது. முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன் விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.