பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்றிரவு(15) கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் 05 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இதற்கமைய பேராசிரியர் கே. பீ. எல். சந்த்ரலால், பேராசிரியர் டபிள்யூ. பீ. ஏ. றொட்றிகோ, கலாநிதி எம். பீ. எஸ். பெர்ணான்டோ, பீ. ஹேன்னாயக்க மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.