சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. இலங்கை தொடர்பான மூன்றாவது மீளாய்வு நடவடிக்கைகளுக்காகவே இந்தக்குழு வருகை தந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதி, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வங்கி உத்தியோகத்தர்களை சந்திக்கவுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது. Read more
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் அதில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையைத் தேர்தல்கள் செயலகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். உரிய நேரத்தில் செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் செயலாளர், டொக்டர் ப.சத்தியலிங்கத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்ற போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் டொக்டர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன், தவராசா கலையரசன், கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய அமைச்சரவை நாளை(18) காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவியேற்பு நடைபெறவுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் இதன்போது பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது சபை அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் நிறைவு செய்யப்படவேண்டுமேன பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனிடையே பரீட்சை காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தங்களது வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடங்காத ஒருவரின் பெயரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்ய முடியாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் நியமனம் குறித்து கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களைத் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக் கட்சியின் செயலாளரினால் தெரிவு செய்ய முடியும்.