இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் செயலாளர், டொக்டர் ப.சத்தியலிங்கத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்ற போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் டொக்டர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன், தவராசா கலையரசன், கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை டொக்டர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.