Header image alt text

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் இடையே இன்று(18) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சிறுவர் வறுமை மற்றும் போஷாக்கின்மையை கட்டுப்படுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளிப்பதற்கு தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க IMF பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். அத்துடன், ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். Read more

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை பெயரிட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் ஷாமிலா பெரேரா தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணிக்கான 2 தேசியப் பட்டியல் உறுப்பினர் ஆசனங்களில் ஒன்றுக்காக அவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஷாமிலா பெரேராவினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று(18) பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். விஜித ஹேரத் வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சராகவும் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர். Read more