புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர், டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக செயற்படுகின்றார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று(19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய அமைச்சரவை கூடியது.