ருஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த கல்விசார் மற்றும் கல்விசாரா தொழிற்சங்கங்கள் தற்போது பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.