முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more
தேசிய மக்கள் சக்தியின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று(21) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது. அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.
10ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வலவும், பிரதி சபாநாயகராக னுச. மொஹமட் ரிஸ்வியும் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.