யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து சுயேட்சையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர்கள் சிலர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர். நேற்றைய தினம் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்த்திருந்தார். Read more
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற பெண்ணும் அவரது சிசுவும் உயிரிழந்தமைக்கு நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த தரப்பினர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்படி, வைத்தியசாலை வளாகத்தில் உள்ள சி.சி.ரி.வி. காணொளி காட்சிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.