Header image alt text

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் காவல்துறை தலைமையகத்தில் இன்றும் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 10ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்த சம்பவம் சமூகத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது. Read more

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும்இ சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது. இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஏலவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளை மறுதினம் (25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அக்குரனைப் பகுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, புதிய வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கான நாடாளுமன்ற அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதனால் உடனடியாக வடமாகாணத்திலிருந்து இடமாற்றம் வழங்குமாறு கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற தாயும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதிக் கோரி அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. Read more