2023ஆம் ஆண்டு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் செலவானது, வருமானத்தை விட எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அதன் இயக்கச் செலவு 2 ஆயிரத்து 412 மில்லியன் ரூபாவாகவும், வருமானம் 288 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 124 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.