நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று(25) மாலை 4 மணி முதல் நாளை(25) மாலை 4 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு குறித்த எச்சரிக்கை அமுலில் இருக்குமென திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் வகித்த அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறுவதாக அந்த கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரான வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவியில் இதுவரை காலமும் விசேட வைத்தியர் பாலித்த மஹிபால பணியாற்றி வந்தார்.
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சுமார் 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வட மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,284 ஆக பதிவாகியுள்ளது.