காரைத்தீவு – மாவடிபள்ளி பகுதியில் உழவு வண்டி ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் 6 பேர் காணாமல் போயுள்ளனர். அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஷ் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் காணாமல் போயுள்ளவர்களின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. Read more
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை உடனடியாக மீட்டுத்தருமாறு குறித்த பெற்றோர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், கரவெட்டி மற்றும் முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோர்களே, ஆளுநரை இன்று நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
அடுத்த வருடத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் தொடர்புடைய விவாதம் எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது. mகுறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 150 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.