தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் அடுத்த 6 மணித்தியாலங்களில் புயலாக வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more
சீரற்ற காலநிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார். இன்று (27) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மதவாச்சி பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் அடை மழையின் போது பேருந்து வேகமாக வந்ததால் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்இ உயிரிழந்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்தவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 9 பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை – காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காணாமல் போயிருந்த 2 சிறுவர்கள் இன்று(27) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று(26) மாலை இடம்பெற்ற அனர்த்தத்தில் 6 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர். ஏனைய 4 சிறுவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.