நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்தவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 9 பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேவைப்படும் பட்சத்தில் கிழக்கு மாணத்தில் மேலும் பல நலன்புரி முகாம்களை அமைக்க தயாராகவிருப்பதாக மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.