Header image alt text

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகப்பூர்வ இல்லங்களும் மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலனச் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அமைச்சர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்குமாறு எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என அந்தச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள் முன்னரை போன்றே வழங்கப்படும் எனவும், இதுவரையில் குறித்த வரப்பிரசாதங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும்போது இதனைத் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக 35 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு லண்டனில் வசிக்கும் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதியுதவியில் இன்று உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்), தோழர்கள் பரமசிவம், சந்திரன், ரூமி ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

Read more

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக 138,191 குடும்பங்களைச் சேர்ந்த 463, 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read more

29.11.1985 அன்று திருவையாறில் மரணித்த தோழர்கள் சின்ன நியாஸ் (நா.பாலசந்திரன் – வட்டகச்சி), ஐவன் (மகாலிங்கம் – கனகபுரம்) ஆகியோரின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் சிறந்த பலன்கள் கிடைக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் ஊடக பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more

கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை, ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாகப் பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜவிற்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது. Read more