தென்மேற்கு வங்காள விரிகுடாவில்ரூnடிளி;நிலைகொண்டுள்ள ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ள புயல் எதிர்வரும் மணித்தியாலங்களில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையேயான கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
கடந்த அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இந்த குழுக்களை நியமித்ததால் பெருமளவு பணம் விரயமாவதை அரசு கண்டறிந்ததை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாராளுமன்றக் குழுக்களின் முறையான நியமனம் தொடர்பான விஷயங்களை மறுஆய்வு செய்து அதற்கான முன்மொழிவுகளை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்குத் தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.
காரைதீவு ரூனெயளர் மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்படி, அனர்த்தத்தில் காணாமல் போயிருந்த 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நிந்தவூர் பகுதியிலிருந்து மதரஸா பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுடன் சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று கடந்த 26ஆம் திகதி இரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணித்தவர்களில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் சிலர் அன்றைய தினமே மீட்கப்பட்டனர்.
முல்லைத்தீவு-சிலாவத்துறை பகுதியில் நேற்று பிற்பகல் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். குளிரான காலநிலை காரணமாக வீட்டுக்குள் பற்றவைக்கப்பட்ட தீ பரவியதில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.