அறுகம்பை பிரதேசம் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருந்த பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரையில் அறுகம்பை பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கடந்த 23ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் பாதுகாப்பு தொடர்பான அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த பாதுகாப்பு தொடர்பான ஆலோசனையை விலக்கிக்கொள்ளுமாறு வௌிவிவகார அமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. அதற்கமைய, 30 உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக 50 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது.
12.11.1987 இல் செட்டிகுளம் கல்லாற்று பாலத்தருகில் மரணித்த தோழர்கள் பேர்னாட் (பருத்தித்துறை), கருணாகரன் (பள்ளிமுனை), சேகர் (மண்டான்), தமிழ்த்தம்பி (தி.இராசரத்தினம்- சுழிபுரம்), கரன் (சு.திருநாவுக்கரசு- ஸ்கந்தபுரம்), யோகன் (ஆட்காட்டிவெளி), பிரதிகரன் (கச்சாய்), ஞானராஜ் (ப.மோகன் – பன்குளம்), றமணன் (கனகரட்ணம் – யோகபுரம்) ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி குறித்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கணினி அவசரப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கணினி அவசரப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் சேவை இன்று(12) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாகோ மற்றும் அனுராதபுரம் இடையிலான ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தலைமன்னார் ரயில் சேவை சுமார் 11 மாதங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே போக்குவரத்து பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த 23ஆம் திகதி பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியதுடன், மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 06 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியார பட்டாணிச்சூர் பகுதியின் பிரதான வீதிக்கு அருகாக இன்று இரவு 8 மணியளவில் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு உந்துருளியில் பிரவேசித்த சிலர் பொதுக்கூட்டத்தைப் பார்த்துக் கூச்சலிட்டனர்.
11.11.2020 – 11.11.2024
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று(11) ஆரம்பமானது. இந்த மாநாடு அசர்பைஜானின் தலைநகர் பாக்குவில்(Baku) நடைபெறுகின்றது. 190-இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்முறை கோப்-29 மாநாட்டில் கலந்துகொள்வதுடன் எதிர்வரும் 22 ஆம் வரை மாநாடு நடைபெறவுள்ளது.