Header image alt text

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் சிறந்த பலன்கள் கிடைக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் ஊடக பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more

கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை, ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாகப் பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜவிற்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது. Read more

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அதன்படி புர்கினா பாசோ (Burkina Faso), பொஸ்னியா மற்றும் எர்செகோவினா (Bosnia and Herzegovina) , அசர்பைஜான் குடியரசு (The Republic of Azerbaijan), ஜோர்ஜியா (Georgia), Read more

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. Read more

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

காரைதீவு மாவடிபள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போனவர்களில் இதுவரையில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிந்தவூர் பகுதியிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று நேற்று முன்தினம் இரவு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. Read more

சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ் ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறைப் பிரிவு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று பயணிக்க முடியும் எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் வானிலை அறிக்கைகளுக்கு அமைவாக உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, டிசம்பர் 04ஆம் திகதி முதல் பரீட்சைகள் மீள ஆரம்பிக்கப்படும். நவம்பர் 27ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 21ஆம் திகதியும் நவம்பர் 28ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 23ஆம் திகதியும் நவம்பர் 29 இற்குரிய பரீட்சை டிசம்பர் மாதம் 27ஆம் திகதியும் Read more

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் அடுத்த 6 மணித்தியாலங்களில் புயலாக வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more

சீரற்ற காலநிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார். இன்று (27) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more