Header image alt text

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மதவாச்சி பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் அடை மழையின் போது பேருந்து வேகமாக வந்ததால் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்இ உயிரிழந்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்தவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 9 பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார். Read more

அம்பாறை – காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காணாமல் போயிருந்த 2 சிறுவர்கள் இன்று(27) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று(26) மாலை இடம்பெற்ற அனர்த்தத்தில் 6 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர். ஏனைய 4 சிறுவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. Read more

காரைத்தீவு – மாவடிபள்ளி பகுதியில் உழவு வண்டி ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் 6 பேர் காணாமல் போயுள்ளனர். அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஷ் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் காணாமல் போயுள்ளவர்களின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. Read more

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை உடனடியாக மீட்டுத்தருமாறு குறித்த பெற்றோர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், கரவெட்டி மற்றும் முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோர்களே, ஆளுநரை இன்று நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். Read more

அடுத்த வருடத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் தொடர்புடைய விவாதம் எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது. mகுறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 150 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. Read more

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more