யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Read more
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று(25) மாலை 4 மணி முதல் நாளை(25) மாலை 4 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு குறித்த எச்சரிக்கை அமுலில் இருக்குமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் வகித்த அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறுவதாக அந்த கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரான வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவியில் இதுவரை காலமும் விசேட வைத்தியர் பாலித்த மஹிபால பணியாற்றி வந்தார்.
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சுமார் 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வட மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,284 ஆக பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளைய தினம் இடம்பெறவுள்ளது. பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 33,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை 1914ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பின்னர் ஏற்பட்ட காலநிலை சீர்கேடு மற்றும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் போன்றவற்றின் காரணமாகக் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
2023ஆம் ஆண்டு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் செலவானது, வருமானத்தை விட எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அதன் இயக்கச் செலவு 2 ஆயிரத்து 412 மில்லியன் ரூபாவாகவும், வருமானம் 288 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.