Header image alt text

தேசிய மக்கள் சக்தியின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று(21) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். Read more

2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது. அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. Read more

10ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வலவும், பிரதி சபாநாயகராக னுச. மொஹமட் ரிஸ்வியும் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இன்று (20) காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தபோதே இந்தக் காசோலையை கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான சீனத் தூதுவரை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாணத்தில் ஊழல் ஒழிப்பு, அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார். Read more

வாஸ்கொடகாம என்ற அதிசொகுசு கப்பலொன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள குறித்த கப்பலில் 689 சுற்றுலாப் பயணிகளும் 460 பணியாளர்களும் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன், பிரித்தானியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த கப்பலில் வருகை தந்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த ராஜஸ்ரீ என்ற பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி குறித்த வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (20) மாலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன். குறித்த பெண்ணின் மரணத்தின்போது. கடமையிலிருந்த வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் பதவி விலக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாகக் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் காவல்துறையினரும்இ கலகமடக்கும் அதிகாரிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர். Read more

2024 உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில்இ பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார். தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டார் விமான நிறுவனத்திற்கு ​சொந்தமான எயார் பஸ் A380 விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு(19) வந்தடைந்தது. இந்த விமானம் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றாகும். அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து வந்த இந்த விமானம் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகளுக்காக இலங்கையில் தரையிறங்கியது.

பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உள்ளிட்ட 16 அமைச்சுகளின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(19) நடைபெற்றது. Read more