புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர், டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக செயற்படுகின்றார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read more
		    
பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள்,  வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசார செலவினங்கள் அடங்கிய வருமான செலவின விபரத் திரட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விபரத் திரட்டைத் தேர்தல் பெறுபேறு வெளியாகி 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
ருஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறும் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. 
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் இடையே இன்று(18) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சிறுவர் வறுமை மற்றும் போஷாக்கின்மையை கட்டுப்படுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளிப்பதற்கு தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க IMF பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். அத்துடன், ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். 
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை பெயரிட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் ஷாமிலா பெரேரா தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணிக்கான 2 தேசியப் பட்டியல் உறுப்பினர் ஆசனங்களில் ஒன்றுக்காக அவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஷாமிலா பெரேராவினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று(18) பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். விஜித ஹேரத் வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சராகவும் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர். 
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. இலங்கை தொடர்பான மூன்றாவது  மீளாய்வு நடவடிக்கைகளுக்காகவே  இந்தக்குழு வருகை தந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதி, அமைச்சின் அதிகாரிகள்  மற்றும் வங்கி உத்தியோகத்தர்களை சந்திக்கவுள்ளதாக   நிதி அமைச்சு கூறியுள்ளது. 
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.