இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் செயலாளர், டொக்டர் ப.சத்தியலிங்கத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்ற போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் டொக்டர்  ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன், தவராசா கலையரசன், கி.துரைராஜசிங்கம்  ஆகியோர் கலந்து கொண்டனர். Read more
		    
புதிய அமைச்சரவை நாளை(18) காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவியேற்பு நடைபெறவுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் இதன்போது பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது சபை அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. 
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் நிறைவு செய்யப்படவேண்டுமேன பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனிடையே பரீட்சை காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 
தங்களது வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடங்காத ஒருவரின் பெயரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்ய முடியாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் நியமனம் குறித்து கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களைத் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக் கட்சியின் செயலாளரினால் தெரிவு செய்ய முடியும். 
ஒற்றையாட்சிக்கு எதிராகவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதாகத் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80,000 வாக்குகள் மாத்திரம் கிடைத்துள்ள போதிலும் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு 150,000 வாக்குகள் கிடைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்றிரவு(15) கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் 05 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். 
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்கும்  பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்றிரவு(15) மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை ஜனாதிபதி, அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைத்திருந்தார்.
10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நாளில் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் நடைபெறுவதால் அன்றையநாள் மிகவும் விசேட தினதாகும். முதலாவது அமர்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகின்றது. முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன் விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். 
திருகோணமலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
2024 பொதுத் தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.