31.12.1994இல் கொழும்பில் மரணித்த எமது கட்சியின் முன்னாள் உபதலைவர் தோழர் கரவை அங்கிள் (ஏ.சி. கந்தசாமி- கரவெட்டி) அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..Posted by plotenewseditor on 31 December 2024
Posted in செய்திகள்
31.12.1994இல் கொழும்பில் மரணித்த எமது கட்சியின் முன்னாள் உபதலைவர் தோழர் கரவை அங்கிள் (ஏ.சி. கந்தசாமி- கரவெட்டி) அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..Posted by plotenewseditor on 31 December 2024
Posted in செய்திகள்
ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யும்போது பயணியின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளடக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசனங்களை முன்பதிவு செய்தவர்கள் ரயில் நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது ரயிலில் பயணச்சீட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும் போது, Read more
Posted by plotenewseditor on 31 December 2024
Posted in செய்திகள்
ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஊடக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 31 December 2024
Posted in செய்திகள்
அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நபரொருவர் அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி உட்பிரவேசித்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 31 December 2024
Posted in செய்திகள்
பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் கலந்துரையாடிய பின்னர் இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்தார். புதிய விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் 2 சுற்றுக் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. Read more
Posted by plotenewseditor on 31 December 2024
Posted in செய்திகள்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ YouTube கணக்கு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. தற்போது அந்த கணக்கின் நிர்வாகம் முழுமையாக அதன் நிர்வாகிகளினால்(Admin) இழக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. நேற்று(30) இரவு 7.30 அளவில் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 December 2024
Posted in செய்திகள்
கனடா ழுளாயறயவில் வசிக்கும் பிரதீபராஜ் ஜிந்துயா தம்பதிகளின் செல்வப் புதல்வன் உருத்திரா தேவா (இரத்தினா, செந்தில்) அவர்களின் நான்காவது (30.12.2020.) பிறந்தநாளை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 30.12.2024) வற்றாப்பளையில் இடம்பெற்றது. இதன்போது சூரி முன்பள்ளி, இளங்கதிர் முன்பள்ளி, நிரஞ்சன் முன்பள்ளி, செங்கதிர் முன்பள்ளி ஆகிய நான்கு முன்பள்ளிகளைச் சேர்ந்த 80 சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களும், கேக், சிற்றுண்டி தேநீர் என்பனவும் வழங்கப்பட்டது.Posted by plotenewseditor on 30 December 2024
Posted in செய்திகள்
கனடா oshawaவில் வசிக்கும் தோழர் விஜயன் அவர்களின் பேரனும், பிரதீபராஜ் ஜிந்துயா தம்பதிகளின் செல்வப் புதல்வனுமாகிய உருத்திரா தேவா (இரத்தினா, செந்தில்) அவர்களின் நான்காவது (30.12.2020.) பிறந்தநாளை முன்னிட்டு புத்தகைப்பைகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 30.12.2024) திருகோணமலை பாலையூற்று முருகன்கோவிலடியில் சக்தி மாதர் சங்கத்தின் தலைவி திருமதி வசந்தினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.Posted by plotenewseditor on 30 December 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டடத்தின் தரைத்தளத்தில் நிறுவப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 December 2024
Posted in செய்திகள்
புதிய இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நாளை(31) ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read more