Header image alt text

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட யாழ். கந்தர்மடம், அரசடி, ஐந்தாம் ஒழுங்கையைச் சேர்ந்த 108 குடும்பங்களுக்கு லண்டனில் வசிக்கும் திரு பாலசுப்பிரமணியம் (தோழர் பாலா) அவர்களின் நிதியுதவியில் நேற்று (30.11.2024) பாய்கள் மற்றும் போர்வைகள் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் வலிமெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.தர்சன், தோழர் பிறேம் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி உதவியினை வழங்கிவைத்தனர்.

Read more

01.12.1990இல் மரணித்த தோழர் அருணாசலம் சேகர் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகக் குறி;ப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்  சப்ரகமுவ வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – வடக்கு குற்றப் பிரிவினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட பயணத்தடை உத்தரவுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர். 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி, பிரித்தானியக் குடியுரிமை பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களைக் கோருமாறு அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காகக் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்துவிட்டு புதிதாக வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும் எனக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். Read more