வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட யாழ். கந்தர்மடம், அரசடி, ஐந்தாம் ஒழுங்கையைச் சேர்ந்த 108 குடும்பங்களுக்கு லண்டனில் வசிக்கும் திரு பாலசுப்பிரமணியம் (தோழர் பாலா) அவர்களின் நிதியுதவியில் நேற்று (30.11.2024) பாய்கள் மற்றும் போர்வைகள் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் வலிமெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.தர்சன், தோழர் பிறேம் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி உதவியினை வழங்கிவைத்தனர்.