Header image alt text

மாகாண சபை முறைமையை ஏற்கமாட்டோம் எனும் மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு, அதனை அகற்றுவதற்கான ஆணையைத் தந்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி தவறான புரிதலைக் கொண்டுள்ளதோ என்று சந்தேகிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டுவந்து, Read more

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. Read more

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இடையிலான நீண்டகால உறவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரஇ வர்த்தக விவகாரங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. Read more

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக K.D.R.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனு குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர், கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஜனாதிபதி அலுவலகத்தில் K.D.R.ஒல்காவிடம் இன்று(02) கையளித்தார்.

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிந்துஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதற்கமைய நாட்டின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணாகவும் இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராகவும் முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். Read more