நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

இதற்கமைய, இந்தக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.