மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தஇ அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர 3 வருடங்கள் வரை செல்லும். அதனால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற முறைமை தொடர்பில் தமது பரிந்துரைந்துகளை அனைவரும் முன்வைக்கலாம். Read more
அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் அதிகளவான செலவுகளைக் கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைசார்ந்த வகையில் பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்குச் செலவாகும் அதிகளவான தொகையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான அதிசொகுசு வாகனங்களைப் பாவனையிலிருந்து அகற்றுதல் பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக அமையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும், புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்கள் தமது வருமான செலவு அறிக்கையை தனித்தனியாக தயாரித்து எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் தாம் போட்டியிட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் செயலகத்திற்கும் செலவு அறிக்கையை கையளிக்க வேண்டும் என ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள டியேகோ கார்சியா தீவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நிர்க்கதிக்குள்ளாகியிருந்த புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் உள்ளடங்குவதாகத் தெரியவந்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக அந்த திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகக் கடமையாற்றிய மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் I.S.முத்துமால நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு நாளை மறுதினம் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு பகுதியாக அவரது இந்த விஜயம் அமையவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இலங்கை கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் அவர் இலங்கை வரவுள்ளார்.