2018.12.04இல் கொழும்பில் மரணித்த அமரர் பொன்னுத்துரை அசோகன் (தோழர் நிசாந்தன் – அச்சுவேலி) அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் இன்றுPosted by plotenewseditor on 4 December 2024
Posted in செய்திகள்
2018.12.04இல் கொழும்பில் மரணித்த அமரர் பொன்னுத்துரை அசோகன் (தோழர் நிசாந்தன் – அச்சுவேலி) அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் இன்றுPosted by plotenewseditor on 4 December 2024
Posted in செய்திகள்
தாமரவில், ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், 24/27A, சகாயமாதாவீதி, அன்புவழிபுரம், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டவரும், தோழர் வக்கீல் (ஜெகமோகன்) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி. சித்திரவேல் தெய்வானைப்பிள்ளை அவர்கள் நேற்றையதினம் (03.12.2024) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகிறோம்.Posted by plotenewseditor on 4 December 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 4 December 2024
Posted in செய்திகள்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன்றம் முதற்தடவையாக கூடியுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் இரண்டு பிரதித்தலைவர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Posted by plotenewseditor on 4 December 2024
Posted in செய்திகள்
அரசாங்கத்தின் ஊடநயn ளுசi டுயமெய வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் தெரிவித்தார். உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் எதிர்காலத்திலும் அவ்வண்ணமே முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். Read more
Posted by plotenewseditor on 4 December 2024
Posted in செய்திகள்
தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தென்கொரிய ஜனாதிபதியினால் அங்கு அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. பின்னர் குறித்த சட்டத்தைத் தளர்த்துவதற்கான யோசனை தென்கொரிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம், குறித்த சட்டத்தைத் தளர்த்துவதாக தென்கொரிய ஜனாதிபதியும் அறிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 4 December 2024
Posted in செய்திகள்
பாதுகாப்பின் நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை குறைந்தபட்சம் ஒன்றாக வரையறுத்து வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நபரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து ஆய்வு நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more