இணையவழி மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளில் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாட்டில் தங்கியுள்ள 13 வெளிநாட்டுப் பிரஜைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்கள் மூன்று அநாமதேய நிறுவனங்களில் விசா பெற்று இலங்கைக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Read more
பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் தமது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பாதீட்டுத் திட்டத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்கு அவர் முயற்சித்தமையை அடுத்து எதிர்க்கட்சியினரால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,