பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் தமது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பாதீட்டுத் திட்டத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்கு அவர் முயற்சித்தமையை அடுத்து எதிர்க்கட்சியினரால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இதன்படி, பிரான்சில் 1962ஆம் ஆண்டுக்குப் பின்னர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் ஊடாக ஆட்சி கவிழ்வது இதுவே முதன்முறையாகும்.

இந்தநிலைமை பிரான்சின் அரசியல் உறுதியற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு 288 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 331 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.