Posted by plotenewseditor on 6 December 2024
Posted in செய்திகள்
நாடாளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்இ நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. இதில் 46,438 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றஇ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். Read more